ஜோன்ஸ்டன் சட்ட விரோத சொத்துகள் விசாரணைப் பிரிவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சம்பத் மனம்பேரி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.

சம்பத் மனம்பேரி என்பவருக்கு எதிராக நடைபெற்று வரும் விசேட விசாரணையின் ஒரு பகுதியாகவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவிற்கு இன்று வருகை தந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.