இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்தினா இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக இராணுவத் தலைமையகத்தில் நேற்று (01) பதவியேற்றார்.
அவர், மத அனுட்டானங்களுக்கு முன்னுரிமை அளித்து, பதவி நிலை தலைமை அதிகாரி அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டுப் பதவியேற்றார்.
