விஜய் ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் (தலா 2 உறுப்பினர்) ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. அவை இன்று (08) கூடி ஆராய்ந்து விஜய்க்கு அதரவளிக்க முடிவு செய்துள்ளன.
இதேவேளை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நாளை முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெரும்பான்மை பலத்தை (118) நிரூபிக்க மே 10 ஆம் திகதி வரை தமிழக ஆளுநர் அவகாசம் வழங்கியுள்ளார்!
