மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தித்துவா புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீடுகள் கையளிக்கும் நிகழ்ச்சி இன்று (26) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த தித்துவா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய வீடுகளைக் கையளிக்கும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது

கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரம்படி தீவு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 4 வீடுகளைக் கையளிக்கும் வைபவம் 26.11.2026 இன்று கிரான் பிரதேச பிரதேச செயலாளர் திருமதி பி. நிருபா தலைமையில் நடைபெற்றது
இதில் பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்து கொண்டு 50 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைத் திறந்து வைத்து பயனாளிகளிடம் வழங்கினார்.

இந்த வீட்டுத் திட்டத்தைப் பெற்ற ஐந்து பிள்ளைகளின் தாய் இங்கு கருத்து தெரிவிக்கையில், தாம் சொந்த வீடு இல்லாமல் கடந்த பல வருடங்களாக மிகுந்த கஷ்டப்பட்டதாகவும் இதனைப் பெற்றுத் தந்த அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தாம் மிகுந்த காலில் விழுந்து நன்றியைத் தெரிவிப்பதாக இங்குத் தெரிவித்தார்
தகிரான் பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள், இப்பகுதிக்கான பிரஜா சக்தி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு எஸ்.வரதராஜன்
