மட்டக்களப்பு மாவட்டத்தில் வளி மாசடைந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் எல்லினோ காலநிலை அடுத்து கடந்த சில தினங்களாக வளி மாசடைந்துள்ளது.

இதனால் சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அதிகாலையிலும் மாலை வேளைகளிலும் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ளுமாறும் முகக் கவசங்கள் அணிந்து கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதனால் மாணவர்கள் வயோதிபர்கள் சிறுவர்கள் சுவாச சம்பந்த நோயாளிகள், நன்னீர் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு சுகாதாரத் தரப்பினரை எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இன்று காலை மட்டக்களப்பு நகரில் அதிக அளவு புகைமூட்டத்துடன் வானிலை காணப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.
மட்டக்களப்பு எஸ். வரதராஜன்
