மட்டு நகரில் புதிய உப தபாலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!

அரசாங்கத்தின் கிளீனிங் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் தகவல் தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்த தொடர்ச்சியாக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

மாவட்டத்தின் இந்த வருடத்தின் மூன்றாவது தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாகாண தபால் திணைக்களத்தின் நிர்வாக இயக்குனர் கே.பிரகாஷ் தலைமையில் இன்று 11.11.2026 காலை நடைபெற்றது

மட்டு நகரில் புதிய உப தபாலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!

இந்த விழாவுக்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு மட்டு நகரில் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த கோட்டை முனை பிரதேசத்தில் புதிய உப தபாலகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இடம் பெற்ற நிகழ்விற்கு மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் மாநகர சபையின் ஆணையாளர் N. தனஞ்செயன் மாநகர சபையின் உறுப்பினர்கள் மாவட்ட தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த தபால் நிலையம் மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் முயற்சியினால் புதிய சொந்த கட்டடத்தில் இயகு உள்ளது.

எஸ்.வரதராஜன்