உலகவாழ் கிறிஸ்தவ பெருமக்கள் இன்று (02) உயிர் நீத்த உறவுகளின் நினைவாக சவக்கால பெருநாள் வழிபாடுகளை முன்னெடுக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ பொதுமக்கள் இன்று தமது உயிர்நீத்த உறவுகளின் நினைவாக உயிர்ப்பின் உறைவிடத்தில் 02.11.2026 இன்று காலை தொடக்கம் தமது உறவுகளின் இருப்பிடத்தை கண்ணீர் மல்க துப்புரவு செய்து; மலர்களால் அலங்கரித்து; சந்தனக்குச்சி,மெழுகுவர்த்தி ஏத்தி அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி வழிபாட்டு நிகழ்வுகளை மேற்கொண்டனர்
மட்டக்களப்பு கள்ளியன்காட்டு கிறிஸ்தவ சேமக்காலையிலும் தமது உயிர் நீத்த உறவுகளை நினைந்து ஆத்ம சாந்தி வேண்டி விசேட வழிபாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்தனர்.
தமது உறவுகளுக்காக இன்று விரதம் இருந்து மிகவும் உருக்கமாக கண்ணீர் மல்கி பிள்ளைகள் தமது தாய் தந்தையரை நினைத்தும் தம்மை விட்டு பிரிந்த உறவுகளை நினைத்தும் உயிர்ப்பின் உறைவிடமான இடத்தை முற்றாக சுத்தப்படுத்தி மலர் தூவி வழிபாடுகளில் ஈடுபட்டதை காணக் கூடியதாக உள்ளது.
எஸ்.வரதராஜன்


