வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளைப் அமைத்துக் கொடுக்கும் அழகான நாடு வளமான வாழ்க்கை அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அமைத்து கொடுக்கப்பட்டு வருகின்றன
ஒரு வீட்டிற்கு தலா 10 இலெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 08 பயனாளிகளுக்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்ச்சி, தேசிய வீடமைப்பு மாவட்ட அதிகார சபையின் முகாமையாளர் ரி. சுபாஸ்கரன் தலைமையில் 02.11.2026 இன்று இடம்பெற்றது
புதிய வீடுகளைத் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்ச்சிக்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு பயனாளிகளிடம் வழங்கினார்.
அப்போது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகஸ்த்தர் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டு 455 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றத.
ஏஸ். வரதராஜன்


