இலங்கையில் எரிபொருள் விலை நள்ளிரவு முதல் உயர்வு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றருக்கு 10 ரூபாய்
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றருக்கு 15 ரூபாய்
ஓட்டோ டீசல் லீற்றருக்கு 5 ரூபாய்
சுப்பர் டீசல் லீற்றருக்கு 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
– இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)