மற்றுமோர் இறந்த கொம்பன் யானையின்உடல் மீட்பு!

கடும் நடவடிக்கை கோருகிறார் சஜித் பிரேமதாச

இறந்த கொம்பன் யானையின் உடலொன்று கஹடகஸ்திகிலியா, மீமின்னாவலை பகுதியில் உள்ள காயன்கொல்லாவை குளத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

கஹடகஸ்திகிலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளினால் இந்த யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட போது யானையின் இடதுபுறத் தந்தம் காணப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

யானையின் இடது தந்தம் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த யானை சில நாள்களுக்கு முன்பாக உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கஹடகஸ்திகிலியா வனஜீவராசிகள் அலுவலகம், திவுல்வெவை பொலிஸார்,இராணுவத்தினர் இணைந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காவன்திஸ்ஸா கொம்பன் யானை உயிரிழந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் ஒரு கொம்பன் யானை இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடும் நடவடிக்கை கோரும் சஜித்!

இரண்டாவது கொம்பன் யானையின் இறந்த உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகக் கடும் எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், ஏற்கனவே கொல்லப்பட்ட காவன்திஸ்ஸா கொம்பன் யானைக்கு நினைவுத்தூபி அமைக்கப்போவதாகவும் பிரேமதாச தெரிவித்துள்ளார்.