ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்:பங்களாதேஷில் பதற்றம்!

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டத்தால் பதற்றம் உருவாகியுள்ளது.

மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தை 30,000 டாக்காவாக உயர்த்தக் கோரி டாக்கா, காஸிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊழியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் முக்கியமான வீதிகள் முடக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதில் இருதரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சில இடங்களில் பொலிஸ் காவல் நிலையங்கள்,தொழிற்சாலைகள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கையை ஆராய்வதற்காக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஊதிய நிர்ணய சபையை அமைக்க பங்களாதேஷ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது