பரிசுக் பொதியைத் தருவதாகக் கூறி, வட்ஸ்அப் ஊடாக 1,455,000 ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின்பேரில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபரின் கணக்கிற்கு பணத்தை வைப்புச் செய்து ஏமாந்த நபர், கணினி குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் வடமேல் மாகாண பிரிவுக்கு முறைப்பாடு செய்திருக்கிறார்.
அதற்கமைய, நேற்றுக் (30) காலை கட்டுநாயக்க விமான நிலைய பயணிகள் முனையத்தில், இந்த மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபரைப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதான சந்தேகநபர் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆவார்.
