மட்டக்களப்பில் தேசிய தூய்மைப் படுத்தல் வேலைத் திட்டம்!

ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் இன்று அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ‘அத்தமை’ (தூய்மைப்படுத்தும்) வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் தேசிய தூய்மைப் படுத்தல் வேலைத் திட்டம்!

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கூழாவடி பிரதான வீதியில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி வி சிவப்பிரியா தலைமையில் 31.10.2026 இன்று காலை பெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்.

மட்டக்களப்பில் தேசிய தூய்மைப் படுத்தல் வேலைத் திட்டம்!

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன்,மட்டக்களப்பு மாவட்ட இராணுவ- வான் படையின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக ஊழியர்கள், முப்படையினர், பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் தேசிய தூய்மைப் படுத்தல் வேலைத் திட்டம்!

இப்பிரதேசத்தின் வடிகான்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் பிரதான வீதியில் காணப்பட்ட கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டன.தேசத்தைத் துப்புரவாக வைத்திருக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

எஸ்.வரதராஜன், மட்டக்களப்பு