ஜெயலலிதாவை போல் நாங்களும் வெகுண்டு எழுவோம்: கீர்த்தனா

தவெக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் பொய்க் குற்றச்சாட்டுகள் வைப்பதாக அமைச்சர் கீர்த்தனா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களுடன் அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது, “பெண்களுக்காக முதல்வர் விஜய் பல திட்டங்களைக் கொண்டு வருகிறார். தவெகவினர் மீது தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இவ்வாறு பொய்க் குற்றச்சாட்டுகளால், தவெகவினர் சோர்வடைந்து வீட்டுக்குள் இருந்து விடுவேன் என நிறைய பேர் நினைக்கின்றனர்.

ஆனால், எனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலேயே குற்றச்சாட்டு வைப்பதற்குக் காரணம், அவர்களுக்கு இருக்கும் பயம்தான். அவர்கள் எத்தனை குற்றச்சாட்டுகள் வைத்தாலும், நான் தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

எதிர்க்கட்சிகள்தான் தமிழ்நாட்டை பின்நோக்கித் தள்ளிக்கொண்டு இருக்கின்றனர். பாராட்டவில்லை என்றாலும், பொய்க் குற்றச்சாட்டுகளால் ஒருவரை முடக்கப் பார்க்காதீர்கள்

. இப்படித்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் செய்தீர்கள். இருப்பினும், அவர் வெகுண்டெழுந்து வந்தார். அவரைப் போல் நாங்கள் வெகுண்டெழுவோம்” என்று தெரிவித்தார்.