ரூ.45 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் நேற்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடத்திய சோதனையின் போது, சுமார் 454 மில்லியன் ரூபாய் சந்தைப் பெறுமதி கொண்ட கொக்கைன்,எக்ஸ்டசி (Ecstasy) ஆகிய போதைப்பொருள்களுடன் 46 வயதான இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிலால் பொறியியலாளரான அந்தப் பயணி, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 654 என்ற விமானத்தில் பாரிஸிலிருந்து தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளார்.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கா​க சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பயணியின் பயணப் பைகளைச் சோதனையிட்டபோதே இந்தப் போதைப்பொருள்கள் கண்டறியப்பட்டன. மேலதிக பரிசோதனையில் அவை கொக்கைன்,எக்ஸ்டசி போதைப்பொருள்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.