October 20, 2026 10:53 am
இடியுடன்கூடிய மழை பெரும்பாலான பகுதிகளில் பெய்யும்!

இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் காரணமாக,
இன்று (20) மாலை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல், ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அத்துடன், வட ,வடமேல் மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவை, மத்திய,ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.