October 19, 2026 1:36 pm
அக்குறனை கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு, பலர் காயம்!

அக்குறணையில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளனர்.

அக்குறணை மாத்தளை வீதியில் ஏழாவது மைல் கல் அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சீமெந்து ஏற்றிய லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடனும் வீதியில் சென்றவர்கள் மீதும் மோதியுள்ளது.

இதில் காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தினால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.