ராமஞ்ஞ பீடத்தின் அனுநாயக்க தேரர் காலமானார்

ராமஞ்ஞ பீடத்தின் அனுநாயக்க தேரர் காலமானார்.

மறைந்த கெப்பட்டியாகொட சிறிவிமல அனுநாயக்க தேரரின் பூதவுடல் எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4:00 மணிக்கு கண்டி, கெட்டம்பே மாநகர விளையாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

சில காலம் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த தேரர், கண்டி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (18) காலை தமது 96வது வயதில் காலமானார்.

கெப்பட்டியாகொட சிறிவிமல அனுநாயக்க தேரர், ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயக்க தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.