நுவரெலியா, ஹற்றன் கல்வி வலய பாடசாலைகள் நாளை பூட்டு

நுவரெலியா, ஹற்றன் கல்வி வலயங்களின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (25) மூடப்படும் என்று வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாளை 2026.09.25 ஆம் திகதி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.டி. திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

ஹற்றன் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் விடுத்துள்ள அறிவித்தலில் நாளை பாடசாலைகள் இயங்காதென அறிவித்துள்ளார்.

எஸ்.கௌசல்யா