மின்னல் தாக்கிப் 15 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் அகலவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிற்றை பிரதேசத்தில் வீடொன்றின் அறையில் தரையில் உறங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
தரையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புக்குப் (Plug Point) பாய்ந்த மின்னல் படுக்கையிலிருந்த சிறுவனையும் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மாணவன் அகலவத்தை பிம்புரை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவி்த்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிற்றை முகவரியில் வசிக்கும் அகலவத்தை மிஹிந்து மகா வித்தியாலயாவில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹசித பிரதீப் குமார (வயது 15) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கௌசல்யா
