ஜனாதிபதி தலைமையிலான மக்கள் பேரணி இன்று

ஜனாதிபதி தலைமையிலான மக்கள் பேரணி இன்று (06) ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்று (06) ஆரம்பமாகிறது.

‘ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி’ எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணிகள் நடத்தப்படுகின்றன.

இந்த மக்கள் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகிறது.

புளத்சிங்களையிலும் பேருவளையிலும் இந்தப் பேரணிகள் முறையே பிற்பகல் 2.00 மணிக்கும் பிற்பகல் 3.30 இற்கும் ஆரம்பமாகின்றன.(மலைக்குருவி)