மட்டக்களப்புவில் நீர் விநியோகம் மட்டுப்பாடு

மட்டக்களப்புவில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்புவில் நீர்விநியோகத்தை நாளாந்தம் நான்கு மணித்தியாலம் இடைநிறுத்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலையால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்திருப்பதால், நாள்தோறும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நீர்விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.