செவனகலை சீனித் தொழிற்சாலை மறு ஆறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளது
ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் செவனகல தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரை காலவரையறையின்றி மூட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி முதல் சில ஊழியர்கள் பணியில் இருந்து விலகி உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்காததால், நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 26 மற்றும் 27ஆம் திகதிகளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களைத் தவிர ஏனைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
நேற்று (28) உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்ததால் தொழிற்சாலையை காலவரையறையின்றி மூட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
