பதுளையில் காணாமற்போன டாக்டர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகியங்கனை, மாப்பாக்கடவெவை பகுதி பாறையொன்றில் நேற்றிரவு (23) சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரது கார் பதுளை – மகியங்கனை வீதியின் 17ஆம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய தொடர் தேடுதலின்போது டாக்டரின் சடலமும் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்து, பின்னர் காணாமல் போயிருந்தார்.
வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுலை பகுதியில் உள்ள சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக்கொண்டு இராணுவத்தினர் முழு மூச்சில் தேடுதல் நடத்திக் கண்டுபிடித்தனர்.
