மட்டு போதனா வைத்தியசாலையில் இதயவியல் விடுதி திறப்பு

மட்டு போதனா வைத்தியசாலையில் இதயவியல் விடுதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் 432 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையின் இதயவியல் சிகிச்சை விடுதி ( cardiology ward ) திறப்பு விழா இன்று (17) மதியம் நடைபெற்றது.

வைத்தியசாலையின் திட்டமிடல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வைத்தியசாலையின் சிரேஸ்ட இருதய நோயியல் நிபுணர் டாக்டர் அருள்நிதி,வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்கள், வைத்திர்கள்,தாதியர்கள் கலந்துகொண்டு புதிய பிரிவினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

ஆண்கள்,பெண்கள் பிரிவுகளாக இந்த விடுதி திறக்கப்பட்டுள்ளது.இங்கு நவீன வைத்திய உபகரணங்கள் கொண்டு நோயாளர்கள் பராமரிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன

இதயநோயியல் சிகிச்சைப்பிரிவு அமைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த வைத்தியசாலையின் சிரேஸ்ட இருதய நோயியல் நிபுணர் டாக்டர் அருள்நிதி வைத்தியசாலை பணிப்பாளர், சமூகத்தினால் இங்குக் கௌரவிக்கப்பட்டார்.

எஸ். வரதராஜன், மட்டக்களப்பு