கைதான சாகர காரியவசம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கடுவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொலிஸ் மாஅதிபர் நடுவீதியில் கொலை செய்யப்படலாம் எனக் கருத்து தெரிவித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர் கைதானார்.

கடந்த 03ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் சாகர காரியவசம், பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.