இஷாரா செவ்வந்திக்கு விளக்க மறியல் நீடிப்பு

இஷாரா செவ்வந்திக்கு விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கனேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்க மறியல் நீடிக்கப்பட்டது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையொன்றையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.