கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
2024 ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. இருப்பினும் அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் சொன்னார்.
