மட்டக்களப்பில் உயர்தரப் பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் உயர்தர பரிட்சை இன்று (10) ஆரம்பமானது.
மாணவர்கள் இறை ஆசிர்வாதம் வேண்டி ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை முன்னெடுத்துப் பரீட்சை நிலையங்களுக்குச் சென்றதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் இன்று காலை அமைதியான முறையில் பரீட்சைகள் ஆரம்பமாகின.



மட்டக்களப்பு எஸ். வரதராஜன்
