இன்று மட்டக்களப்புவில் அமைதியான முறையில் பரீட்சை நடைபெற்றது

மட்டக்களப்புவில் அமைதியான முறையில் பரீட்சை நடைபெற்றது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் இன்று நடைபெற்றது.

மாணவர்கள் இறை ஆசிர்வாதம் வேண்டி ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு பரீட்சை நிலையங்களுக்குச் சென்றதைக் காணமுடிந்தது.

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் இன்று காலை அமைதியான முறையில் பரீட்சை நடைபெற்றது.

இந்தக் கல்வி வலையத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்திலும் இன்று காலை பரீட்சை மிக அமைதியான முறையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு எஸ். வரதராஜன்