மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலய ஆடிக்கிருத்திகை

மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை விழா இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆடிக் கிருத்திகையையொட்டி இன்று (07-08-2026) மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சபரீஸ்வர சைதன்ய குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்துக்களின் வாழ்வில் ஆடி மாசம் மிகவும் சிறப்பு பெற்ற மாதமாக காணப்படுகிறது.

ஆடி அமாவாசை கதிர்காமம் புனித பாதயாத்திரை ஆடிப்பூரம் என முருகப்பெருமானுக்கு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக இந்துக்களுக்கு காணப்படுகின்றது

இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயத்தில் இருந்து நாதஸ்வர மேள வாத்தியங்கள் முழங்க பேரணியை அலங்கரிக்க, அதிக அளவிலான பெண் அடியார்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து விரதம் இருந்து மட்டக்களப்பு பிரதான வீதிகளூடாக பால்குடைப் பவனில் கலந்து கொண்டு ஆலயம் வரை தலையில் பால் குடத்தை ஏந்தி ஆலயத்தை வந்தடைந்தனர்.

ஆலயத்தில் 1008 சங்கு அபிஷேகங்கள், வழிபாடுகள் இடம் பெற்றதன் பின்பு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. ஆடிக் கிருத்திகையை யொட்டி விசேட பூஜைகளும் தாக சாந்தி நிகழ்வுகளும் இடம் பெற்றன்.

மட்டக்களப்பு எஸ். வரதராஜன்