22ஆவது திருத்தச் சட்டமூலம் வெளியானது

22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சட்டமூலத்தில் உள்ள முக்கிய சாரம்சங்கள் வருமாறு:

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம்:

அரசியலமைப்பின் 107(5) உறுப்புரையைத் திருத்துவதன் மூலம், உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஓய்வுக் காலம்:

பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் — இதில் எது முன்னதாக வருகிறதோ அந்நாளில் ஓய்வுபெற வேண்டும்.

அரசியலமைப்பு உறுப்புரை 137 இல் திருத்தம்:

அரசியலமைப்பின் 137வது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள “12 பேருக்கு மிகாமல்” எனும் சொல்லாடலுக்குப் பதிலாக “24 பேருக்கு மிகாமல்” எனத் திருத்தம் செய்யப்படுகிறது.