இஸ்ரேலியர்களால் பாலஸ்தீன மசூதிகள் தீக்கிரை ஆக்கட்டதாக இருவர் கைது

பாலஸ்தீன மசூதிகள் தீக்கிரை ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குக்கரை பகுதியில் உள்ள இரண்டு பாலஸ்தீன மசூதிகளுக்கு, தீ வைத்த சம்பவம் தொடர்பில்  2 இஸ்ரேலியர்களை பொலிஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 24 ஆம் திகதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்குமிடையே ஏற்பட்ட மோதலில் 4 பாலஸ்தீனர்களும், 2 இஸ்ரேலிய வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதற்குப் பழிவாங்கும் நோக்கில், ஆயுதங்களுடன் பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்த இஸ்ரேலியர்கள், குஸ்ரா மற்றும் கூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2 மசூதிகளுக்குத் தீ வைத்துள்ளனர்.

மசூதியின் உட்புறங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அங்கிருந்த பாலஸ்தீனர்களின் கார்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மேற்குக்கரை பகுதியில் கூடுதல் இராணுவம் குவிக்கப்பட்டு, பெரும் பதற்றம் நிலவி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Follow us on Facebook