களுவாஞ்சிக்குடியில் புதிய தபாலகம் 38 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு விழா கண்டுள்ளது.
29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 38 வருடங்களின் பின் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகத்தை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (25) திறந்து வைத்தார்.
கடந்த யுத்த காலத்தின்போது முற்றாக அழிவடைந்த களுவாஞ்சிக்குடி தபாலகம் இதுவரை காலமும் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது.



இத் தபாலகத்திற்குரிய நிலப்பரப்பு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில், அஃது அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு தற்போது 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்: சம்மாந்துறை விவசாய அலுவலகத்தை நிரந்தர கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த 18.09.2025 அன்று இந்தப் புதிய தபாலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இன்று அவர் கரங்களாலேயே களுவாஞ்சிக்குடியில் புதிய தபாலகம் திறந்துவைக்கப்பட்டது.
தபாலகத் திறப்பு விழாவில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அஞ்சல் மாஅதிபர் எஸ்.ஆர். குமார் சக்குமார, பிரதி அஞ்சல் மாஅதிபர் உசித்த உலங்கமே, கிழக்கு மாகாண தபால் மாஅதிபர் சி.பிரகாஷ், அரச உயர் அதிகாரிகள், தபால் திணைக்கள அதிகாரிகள், பொது மக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு எஸ். வரதராஜன்
