சீனாவில் பவி புயல் அச்சத்தால் 10 இலட்சம்பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவின் கிழக்கு நகரான வென்ஷோவை பவி புயல் நெருங்குவதால் சனிக்கிழமை (ஜூலை 11) 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வென்ஷோவ் அமைந்துள்ள ஷெஜியாங் மாகாணம் முழுவதும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களும், அண்டை மாகாணமான ஃபுஜியானில் 100,000க்கும் அதிகமான மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
“கவலையாக இருந்தாலும், எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். சீனாவில் பவி புயல் தாக்கும் என்கிறார்கள். நாங்கள் இதற்கு முன்பும் புயல்களை எதிர்கொண்டுள்ளோம். இதிலிருந்தும் மீண்டு வருவோம்,”
என்று புயல் எச்சரிக்கையால் மூடப்படவிருந்த பாரம்பரியச் சந்தையில் மளிகைப் பொருள்களை வாங்க வந்த 50 வயது வென்ஷோவ் குடியிருப்பாளரான ஹுவாங் சிங்ஹுவான் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே: 50 கோடியை சுருட்டிய தம்பதி சுவிஸில் மாயம்!
இரண்டு முதல் மூன்று நாள்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்துள்ளதாக அவர் கூறினார்.
“தற்போது அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு வராது என நம்புகிறேன். எனவே, பீதியடைந்து பெருமளவில் உணவையோ அல்லது இதர பொருள்களையோ குவித்து வைக்கத் தேவையில்லை,” என்றார் அவர்.
