திரைப்படப் பாணியில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சாய்ந்தமருதுவில் இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்றில் போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பிடித்த சம்பவம், மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
அம்பாறை,சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக, இந்தச் சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றது.
சோதனை நடவடிக்கையின் போது 32 ,33, 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.

ஹெரோயின் போதைப்பொருள் 15 கிராம் 370 மில்லி கிராம் உட்பட, சொகுசு கார், மோட்டார் சைக்கிள், இரு கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், வங்கி அட்டைகள், சந்தேக நபர்கள் வசம் இருந்து பொலிஸார் மீட்டனர்.
பொலிஸார் திரைப்படப் பாணியில் கைசெய்த சந்தேக நபர்களை சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் சான்றுப் பொருள்களுடன் ஒப்படைத்தனர்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விசாரணை முடங்க இடமளியோம்!
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அதிகாலை 3 மணியளவில், கல்முனை
தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட, புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றை மையப்படுத்தி, தேடுதல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பொலிஸார் சென்றிருந்தனர்.
அப்போது அந்த வீட்டின் அருகில் இருந்து, திடீரென கார் ஒன்றில் இருவர் தப்பி சென்றனர். தப்பிச் சென்றவர்களை பொலிஸ் பரிசோதகர் ரத்னாயக்க தலைமையிலான குழுவினர் துரத்திச் சென்றனர்.
இவ்வாறு துரத்திச் சென்ற போது, மற்றொரு சந்தேக நபர், மோட்டார் சைக்கிள் ஒன்றின் உதவியுடன், தப்பிச் சென்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்.
இதனை அவதானித்த குற்றப் புலனாய்வு பிரிவினர்,அந்தச் சந்தேக நபரை கைது செய்தனர்.தப்பிச் சென்ற காரை, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள, எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாகத் தடுத்து நிறுத்தினர்.
பொலிஸார் திரைப்படப் பாணியில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மக்ககள் மத்தியல் பாராட்டு
அப்போது மங்காத்தா திரைப்பட பாணியில், பொலிஸ் பரிசோதகர் ரத்னாயக்க, சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி தப்பிச் சென்ற காரை, தலைக்கவசத்தினால் எறிந்து, தடுத்து நிறுத்தி, காரில் இருந்த சந்தேக நபர்களையும் கைது செய்தார்.
இது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதேவேளை, இரகசிய தகவலுக்கமைய, ஏற்கனவே சோதனை மேற்கொண்ட வீட்டில், அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர், வருகை தருவதற்கு முன்னர், சுமார் கிலோ அளவில் போதைப்பொருள்கள் பல பகுதிகளிலும் உள்ள விநியோகஸ்தர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சந்தேக நபர்களைக் கைது செய்த இடத்திற்குப் பொலிஸ் தடயவியல் பிரிவு,மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட, பல்வேறு புலனாய்வு தரப்பினர் வருகை தந்திருந்தனர்.
கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்(SDIG) சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG ) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டினார்.
கடந்த மாதமும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கருகாமையில் கடவுளின் பிள்ளை என அழைக்கப்படும் 23 வயதுடைய சந்தேக நபரையும் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்,
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழு,கைதுசெய்திருந்தது.
இந்தக் நடவடிக்கையினால் அந்த ஊர் மக்கள் இரவு முழுவதும் பட்டாசு கொளுத்தி, தமது ஆதரவைத் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கௌசல்யா

