தெல்தெனியாவில் சடலமாக கிடந்தவர் வெலிகமை மருத்துவர்!

தெல்தெனிய வைத்தியர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் அவரின் மனைவியும் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள, உயிரிழந்த பெண்ணின் காதலன், அவர் மனைவி,குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (23/06/2026) சந்தேகநபர்க வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கிப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் பேரில், யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளும் வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரும் இன்று (24/06/2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபர் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண்ணைப் போன்று மாறுவேடமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று, அங்குள்ள ஏனைய இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிசாரிடம் சரணடையவிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கௌசல்யா