நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நபர் இன்று (19) நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்றிருந்த வேளை காணாமல் போயுள்ளார்.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்றையதினம் அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உரிய விசாரணைகளின் பின்னர் அவரது உடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
