உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பாரிய வீழ்ச்சி!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை இன்று (17) 80 அமெரிக்க டொலரைவிடக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று அமெரிக்க டொலர் 76.28 இற்கு நெருக்கமான மதிப்பை எட்டியிருந்தது. அதேபோல், பிரென்ற் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அமெரிக்க டொலர் 79.13 ஆகக் குறைந்திருக்கிறது.

எனினும், அந்த விலைக் குறைப்பை தற்போதைக்கு நம்மால் அனுபவிக்க முடியாது என்று துறைசார்ந்த அமைச்சர் ஒருவர் இன்று அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், மர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.02% என்ற பெரும் வீழ்ச்சியைக் கண்டு, அமெரிக்க டொலர் 71.81 ஆகக் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் வெடித்த ஆரம்பக் காலக்கட்டத்தில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 டொலர் முதல் 70 டொலர் வரையான வரம்பில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.