5-1

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில், கலபொடை தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று (04) காலை வேளையிலேயே இந்தத் துயரமான விபத்து நேர்ந்துள்ளது. இவ்விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவனும், பெண்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியின் சாரதிக்கு (ஓட்டுநருக்கு) எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து நாவலப்பிட்டி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்,கௌசல்யா