இரத்தினபுரி பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி 283 இந்திய வீடுகள்

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி 283
இந்திய வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் மருத்துவ கலாநிதி ஜனக்க சேனாரத்தினா கூறினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் மற்றும் எதிர்காலத்தில்
அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்த ஊடகவியலாளர்
சந்திப்பொன்று 03 ஆம் திகதி மாலை இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில்
இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பாராளுமன்ற
உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்கா தலைமையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் பேராசிரியர்
ஹினிதும சுனில் செனவி,பாராளுமன்ற உறுப்பினர்கள்,
இரத்தினபுரி மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களும் கலந்து
கொண்டனர்.

அங்குத் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவ
கலாநிதி ஜனக்க சேனாரத்தினா:

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமையவுள்ள இந்த 283 வீடுகளும்
அடுத்த மாதம் (ஜுலை மாதம்) ஆரம்பிக்ப்படும். இதற்கான பூர்வாங்க
நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரமபிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர இவ்வருடம் (2026) 67.73 மில்லியன் ரூபாய் செலவில் 37
வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தோட்டக் குடியிருப்புக்களின்
கூரைகளைப் புனரமைக்வென 55.73 மில்லியன் ரூபாய் நிதி பெருந்தோட்ட
மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இம்மாவட்ட பெருந்தோட்டப்பகுதிகளில் 22.67 மில்லியன் ரூபாய் செலவில் 22 உட்கட்டமைப்பு வேலைத்;திட்டங்களும் 41.39
மில்லியன் ரூபாய் செலவில் 21 வீதிகளும் அபிவிருத்தி செய்யபபட்டுள்ளன.

கடந்த வருடம் 34 இந்து ஆலயங்கள் புத்தசாசன மதவிவகார,கலாசார
அமைச்சின் நிதியொதிக்கீட்டில் (8.75 மில்லியன்)
புனரமைக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் 17 இந்து ஆலயங்கள் புனரமைக்க 4.8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர சிறு தேயிலைத் தோட்ட உரமையாளர்களில் 54 ஆயிரத்து 886
பேருக்கு உரமானியம் வழங்கும் பொருட்டு கியூ ஆர் முறைகள்
வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 47 ஆயிரத்து 909 பேருக்கு
50ஆயிரத்து 97 மெட்ரிக் டொன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்