மட்டு நகரில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை பூங்கா வீதி சந்தையில் இன்று (02) காலை இடம் பெற்ற விபத்தில் முன்பள்ளி பாடசாலை சிறுமி ஒருவர் காயமுற்று ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது
கார்ச் சாரதியின் கனவீனத்தால் விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தனது தாயுடன் முன்பள்ளிக்குச் சென்ற சிறுமி ஒருவரே இவ்வாதி விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார். பலத்த காயங்களுக்கு உள்ளான தாயும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு போக்குவரத்துப் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எஸ். வரதராஜன்


