ஈரான் வான் பாதுகாப்பு கட்டமைப்பு அமெரிக்காவால் தகர்ப்பு

அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்​தி​யதற்குப் பதிலடியாக, ஈரானின் வான் பாது​காப்பு கருவிகள், தொலைத் தொடர்பு கோபுரங்​களை அமெரிக்​கப் படை தகர்த்​துள்ளது.

அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோன் சர்​வ​தேச கடல் பகு​தி​யில் கண்​காணிப்​பில் ஈடுபட்​டது. இதை ஈரான் சில நாள்​களுக்கு முன்பு சுட்டு வீழ்த்​தி​யது. ஈரான் வான் எல்லைக்​குள் நுழைந்​த​தால் சுட்டு வீழ்த்​தினோம் என ஈரான் கூறியுள்ளது.

இதற்குப் பதிலடி​யாக ஈரானின் கோருக்,கேஷ்ம் தீவு பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு கருவி​கள், தரைகட்​டுப்​பாட்டு மையங்​கள், ஈரானின் சிரிக் தீவில் உள்ள தகவல் தொடர்பு கோபுரம் ஆகிய​வற்றை அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி தகர்த்​தது.

ஈரான் மீதான தாக்​குதலை அமெரிக்கா தொடர்ந்​தால், பதிலடி முற்​றி​லும் வேறு​வித​மாக இருக்​கும் என ஈரான் கூறி​யுள்​ளது.