இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz ) இன்று (29) அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்தார்.
இலங்கைக்கான வத்திக்கான் பேராயரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கான வத்திக்கான் தூதராக நியமிக்கப்பட்டதற்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கை மக்களுடன் பேணப்பட்டுவரும் நீண்டகால நட்புறவு ஆன்மிக ஒற்றுமை தொடர்பில் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
இருதரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகள், ஈடுபாடுகள் ஊடாக இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த,வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
