தேசிய விசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டு நகரில் பௌத்த கொடிகள், விசாக் அலங்காரக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய விசாக் வாரத்தினை முன்னிட்டு இன்று (29) மட்டு நகரில் அரச நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்கள், பொது இடங்களில் பௌத்த கொடிகளும் விசாக் அலங்காரக் கூடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரில் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் இம்முறை புனித வெசாக் தினத்தைக் கொண்டாடுமுகமாக முன்னாயத்தப் பணிகள் மட்டக்களப்பு தலைமையக போலீஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எஸ். வரதராஜன்



