சீனாவுக்கு எதிராகப் புதிய 100% வரிகள்

அமெரிக்காவும் ஈரானும் வியாழக்கிழமை பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதால், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போா்நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக ஏவப்பட்ட ஈரானின் 4 ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதுடன், 5-ஆவது ட்ரோனை ஏவத் தயாராக இருந்த பண்டாா் அப்பாஸ் பகுதியில் உள்ள ஈரான் தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் மீதும் பாதுகாப்பு நோக்கில் தாக்குதல் நடத்தியது.

தொடா்ந்து, அமெரிக்க ராணுவத் தளம் அமைந்த குவைத்தை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணையை அந்நாட்டுப் படைகள் நடுவானில் வழிமறித்து அழித்தன.

அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாகவே குவைத்தில் உள்ள அந்நாட்டு ராணுவத் தளத்தைக் குறிவைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளதுடன், இதுபோன்ற தாக்குதல்கள் தொடா்ந்தால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு: இத்தீவிர மோதல்களுக்கு மத்தியிலும், ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் தனது நிா்வாகம் முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.

எதிா்வரும் நவம்பா் மாத நாடாளுமன்ற இடைக்கால தோ்தலைக் கருத்தில் கொண்டு, ஈரானுடன் அவசரப்பட்டு உடன்படப் போவதில்லை. உள்நாட்டுத் தோ்தல்கள் தனது வெளியுறவுக் கொள்கையைத் தீா்மானிக்காது’ என்று அவா் திட்டவட்டமாகக் கூறினாா்.

ஈரானுடனான அமைதிப் பேச்சில் நீடிக்கும் இழுபறியால், டிரம்ப்புக்கு அவரது சொந்தக் கட்சியினரிடமே விமா்சனங்கள் எழுந்துள்ளன.

எரிபொருள் விலை உயா்வு வாக்காளா்களின் மனநிலையைப் பாதித்து நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்றும் அக்கட்சியினா் கவலை தெரிவித்துள்ளனா்.