WhatsApp Image 2026-05-14 at 19.28.56 (1)

தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களில் 3400 பேர் பாதிப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

சுமார் ஆயிரம் குடுமபங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எந்தவித அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக விமானப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மழை காரணமாக நோட்டன் விமல சுரேந்திர நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம் செய்ய படுகிறது.

இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள மக்கள் மிக மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என லக்சபான நீர் மின் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஸ்கெலியா நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்புகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு, வாவிகளுடன் தொடர்புடைய வெள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான உயர் மட்ட கந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ. எஸ். எம். சியாத் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (14) நடைபெற்றது.

மாவட்ட செயலகம், கிழக்குப் பல்கலைக்கழகம், FoRID அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து வெள்ள மற்றும் ஏனைய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான அனர்ததணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள் பலவும் கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு வாவியின் ஆழம் குறைந்துள்ளமை, களப்பினைத் துர்வாராமை, நீரேந்து பிரதேசங்கள் குறைந்து வருதல், மாதூரு ஓயாவின் நீர்வரத்து வெள்ளப்பெருக்கிற்கான பிரதான காரணமாக காணப்படுவது இங்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

காலநிலை மாற்றம், தித்துவா புயலினால் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகப் பேராசிரியர் கே. ராஜேந்திரன் அறிக்கையினுடாக அதிகாரிகளுக்குத் தெளிவூட்டினார்.

இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்களான வி. கனகசிங்கம், கே. ராஜேந்திரம், ரீ. மதிவேந்தன், பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்டச் செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மட்டக்களப்பு களப்பினை நம்பி பலரின் வாழ்வாதாரம் தங்கியிருப்பதினால் களப்பினை மாசு ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனர்த்த தனிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலகம் யப்பான் நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சா. நடனசபேசன்