சீரற்ற காலநிலைக்கு ஆயிரம் குடுங்கள் பாதிப்பு: புத்தளத்தில் பெரு வெள்ளம்!

தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களில் 3400 பேர் பாதிப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

சுமார் ஆயிரம் குடுமபங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எந்தவித அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக விமானப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.