WhatsApp Image 2026-05-11 at 13.03.49

கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்க அமைய கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் 345 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிக சாலையின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்து தற்போது சுற்றுப்புற வளாகத்தைச் சுத்தப்படுத்தி அழகு படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் முதலாவது பெரிய வாசிகசாலை கொண்ட இந்தக் கட்டடத் தொகுதியில் பாதுகாப்பிற்கான சுற்றுப்புற மதில் அமைத்தல் நீர்த் தடாக பூந்தோட்டப் பணிகள், சிலைகள் நிறுவுதல், பூச்சு வேலைகள், சுற்றாடல் துப்புரவுப் பணிகள் மட்டு மாநகர சபையின் பிரதி முதல்வர் எஸ்.தினேஷ் தலைமையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

முன்னெடுக்கப்பட்டு வரும் இறுதிக் கட்ட பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

எஸ். வரதராஜன், மட்டக்களப்பு