தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினைச் சநதித்த இந்நாள் முதலமைச்சர் விஜய், மூத்த அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.
இன்றைய சட்டமன்ற அமர்வைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் விஜய் தொடர்ந்து அரசியல் பிரமுகர்களை சந்தித்து வருகின்றார்.
அந்தவகையில், தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்த கையோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசைச் சந்தித்தார்.
அப்போது பூங்கொத்து கொடுத்து முதலமைச்சரை அன்புமணி, சௌவுமியா அன்புமணி ஆகியோர் வரவேற்றனர்.
இதனைதொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முதலமைச்சர் விஜய் சந்திக்கின்றார்.
11-05-2026

